இளமையாக்கினார் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு
ADDED :4492 days ago
சிதம்பரம்: தில்லைத் திருப்புகழ்ச் சபை ஆண்டு விழாவையொட்டி சிதம்பரம் இளமை யாக்கினார் கோவிலில் ஆன்மிக சொற்பொழிவு இன்று துவங்குகிறது. சிதம்பரம் தில்லைத் திருப்புகழ்ச் சபை ஆண்டு விழா இளமையாக்கினார் கோவிலில் இன்று துவங்கி 5 நாட்கள் நடக்கிறது. இதில் திருப்புகழ் நூல் அடிப்படையில் தினமும் இரவு 7 மணிக்கு கோவில் வளாகத்தில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. நிகழ்ச்சியில் முனைவர் அறிவொளி பங்கேற்று சொற்பொழிவு செய்கிறார். இதில் இன்று (24ம் தேதி)"புனித வாய் மலர்ந்து தலைப்பிலும், நாளை (25ம் தேதி) "திருநாவுக்கரசு நினைவு இதுவே மருந்து 26ல் "சொற்றமிழ் பாடுக என்றான் தூமறை பாடும் வாயான், 27ம் தேதி இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க, 28ம் தேதி பேதியா ஆணை கேட்ட பெரியவர் ஆகிய தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது.