உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகண்ட் யாத்ரீகர்களுக்கு நிதியுதவி!

உத்தரகண்ட் யாத்ரீகர்களுக்கு நிதியுதவி!

உத்தரகண்ட் மாநிலத்தில், வெள்ளப் பெருக்கில் சிக்கியுள்ள, யாத்ரீகர்களுக்கு நிதியுதவியாக, திருமலை - திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் தங்கள், ஒரு நாள் சம்பளத்தை அளிக்க முன் வந்துள்ளனர். இதை, தேவஸ்தான ஊழியர் சங்கத் தலைவர் தெரிவித்தார். இதுகுறித்து, தேவஸ்தான செயல் அதிகாரி சுப்ரமணியத்திடம், சங்கத் தலைவர்கள் கலந்து ஆலோசித்தனர். தேவஸ்தானத்தில் பணிபுரியும், 10 ஆயிரம் ஊழியர்கள் சேர்ந்து, தங்கள் ஒரு நாள் சம்பளமான, 40 லட்சம் ரூபாயை நிதியுதவியாக அளிக்க உள்ளனர். திருமலை ஏழுமலையானை தரிசிக்க, வார இறுதியில், பக்தர்கள் அதிக அளவில் வருவதால், அவர்களின் வசதிக்காக, 21 சிறப்பு பஸ்களை இயக்க, ஆந்திர போக்குவரத்து முடிவு செய்துள்ளது. ஐதராபாத்திற்கு, இரண்டு அதிசொகுசு பஸ்கள், பெங்களூருவுக்கு, 15 மற்றும் சென்னைக்கு, நான்கு விரைவு பஸ்கள் இயக்கப்படும். இந்த பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து கொள்ளலாம். சிறப்பு பஸ்கள், வாரம்தோறும், வியாழன் முதல், ஞாயிற்றுக் கிழமை வரை இயக்கப்படும்.

 - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !