மூலநாதர் கோவில் நாயன்மார்கள் வீதியுலா!
ADDED :4492 days ago
பாகூர்: மூலநாதர் கோவில் பிரமோற்சவம் நிறைவு நாளையொட்டி, 63 நாயன்மார்கள் வீதியுலா நடந்தது.பாகூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான வேதாம்பிகை சமேத மூலநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி துவங்கி நடந்து வந்தது. 19ம் தேதி திருக்கல்யாணம், 21ம் தேதி தேர் திருவிழா, 22ம் தேதி தெப்ப உற்சவம் நடந்தது. தொடர்ந்து, விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு 63 நாயன்மார்கள் வீதியுலா நடந்தது.வீதியுலா சென்ற நாயன்மார்கள் சிலையின் மீது, பொதுமக்கள் பூக்களை தூவி வழிபாடு செய்தனர். முன்னதாக காலை 9:00 மணிக்கு 63 நாயன்மார்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏற்பாடுகளை தனி அதிகாரி பிரபாகரன், நிர்வாக அதிகாரி பாலமுருகன், அர்ச்சகர்கள் சங்கரநாராயணன், பாபு செய்திருந்தனர்.