உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் நாட்டியாஞ்சலி

நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் நாட்டியாஞ்சலி

தேவகோட்டை; நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் மகா சிவராத்திரி பூஜைகள் நடந்தன. சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு தேவகோட்டை ஆதிசிவன் நாட்டிய சேத்ரம் சார்பில் மாணவிகள் பல விதமான நாட்டியாஞ்சலி செய்து வழிபட்டனர். ரமேஷ் குருக்கள் தலைமையில் முன்னாள் கல்லூரி முதல்வர் அருணாசலம் முன்னிலை வகித்தார். பிரவீன் குமார் பரிசுகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து முத்தையா, சோமசுந்தரம் சகோதரர்களின் தேவார பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !