முடிமலைநாதன் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்
ADDED :4492 days ago
வேடசந்தூர்: குட்டம் கரட்டுப்பட்டி முடிமலைநாதன் கோயிலில் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். மதுரை, திண்டுக்கல், வேடசந்தூர், வெள்ளணம்பட்டி, சிவகிரி உட்பட சுற்றுப்புற கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தர்மகர்த்தா கந்தசாமி, அறங்காவலர்கள் கலையன்பன், ஆனந்த், சோழா மில் முத்துச்சாமி செய்திருந்தனர். அன்னதானம் நடைபெற்றது.