உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம்

பழநி பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேகம்

பழநி: பழநி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பெரியாவுடையார் கோயிலில் உலகநலன், அமைதி வேண்டி அன்னாபிஷேகம் நடந்தது. பழநி மலைக்கோயிலில் ஜூன் 22-ல், உச்சிகாலத்திலும், ஜூன் 23-ல் திருஆவினன்குடி,கோயிலில் மாலை 5.30 மணிக்கு மேல் (சாயரட்சையில்) அன்னாபிஷேகம் நடந்தது. ஜூன் 24-ல் பெரியநாயகியம்மன் கோயிலில் சாயரட்சையில் பெரிய நாயகியம்மன், சிவன், நடராஜர், முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு அன்னாபிஷேகம் நடந்தது. நான்குநாள் விழாவின் நிறைவாக, நேற்று ( ஜூன் 25) சண்முக நதிக்கரையிலுள்ள, பெரியாவுடையார் கோயிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யபட்டு, அன்னாபிஷேகம் நடந்தது. இதில், நிகழ்ச்சி உபயதாரர்கள், மலைக்கோயில் பிரசாத ஸ்டால் உரிமையாளர் ஹரிஹரமுத்து, ஹோட்டல் கண்பத் உரிமையாளர் செந்தில்குமார், கந்தவிலாஸ் விபூதி ஸ்டோர் நிறுவனத்தார் செல்வக்குமார், ஜெகதீசன், பாஸ்கரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !