உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதிக்கு பாத யாத்திரை

திருப்பதிக்கு பாத யாத்திரை

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த செண்டூர் கிராமத்திலிருந்து 100 பேர் பாத யாத்திரையாக திருப்பதி சென்றனர்.ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் திருக்கோவில் பக்த சமாஜம் சார்பில் பாதயாத்திரை சென்றனர். கடந்த 24ம் தேதி காலை 10 மணிக்கு செண்டூர் கிராமத்தில் இந்த குழுவினர் புறப்பட்டனர். இவர்கள் வரும் 30ம் தேதி திருப்பதியை அடைகின்றனர். அங்கு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து பின்பு செண்டூர் திரும்புகின்னறர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !