உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் முத்துமாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்

திண்டிவனம் முத்துமாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த அசப்பூர் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 19ம் தேதி பந்தக்கால் நடுதல், காப்பு கட்டுதல் நடந்தது. 22ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், புற்றுமண் எடுத்த வருதல், வாஸ்து சாந்தி, முதற் கால யாக சாலை பூஜை துவங்கியது. 23ம் தேதி கோ பூஜை, நாடி சாந்தானம், இரண்டாம் கால விசேஷ மூலிகை பூஜை நடந்தது. அன்று காலை 8.45 மணிக்கு முருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனுவாச சுவாமிகள் மூலம் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தார். மூலவர் முத்துமாரி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !