உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னியம்மன் கோவில் தேர்த் திருவிழா

பொன்னியம்மன் கோவில் தேர்த் திருவிழா

செஞ்சி: காரை பொன்னியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.செஞ்சி தாலுகா காரை கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. கடந்த 18ம் தேதி காப்பு கட்டினர். தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். காலை, இரவு சுவாமி வீதியுலா நடந்தது. 25ம் தேதி மாலை பொன்னியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து, மா விளக்கேற்றி வழிபட்டனர். அம்மன் திருக்கல்யாணம் முடிந்து, மணக்கோலத்தில் அம்மனை தேரில் ஏற்றி வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.விழா ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் வழக்கறிஞர் ராஜவேலு, நாட்டாமை மோகன், துணைத் தலைவர் ராணி துரை, வழக்கறிஞர்கள் மணிவண்ணன், பழனிவேல் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !