உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செம்பியன்மாதேவி கிராமத்தில் திரவுபதியம்மன் தேரோட்டம்!

செம்பியன்மாதேவி கிராமத்தில் திரவுபதியம்மன் தேரோட்டம்!

உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் தேரோட்டம் ஜூன் 28 நடந்தது.இதையொட்டி கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தினம் சுவாமி வீதியுலா நடந்தது. ஜூன் 27 மாலை 6 மணிக்கு திரவுபதியம்மனுக்கும், அர்ஜூனனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. ஜூன் 28 மதியம் 2 மணிக்கு அரவானுக்கு பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜூன் 28 மதியம் 3 மணிக்கு திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் தாசில்தார் லலிதா உட்பட பலர் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !