உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம்

சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி வருண யாகம்

திருக்கனூர்: திருவக்கரை, சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், மழை வேண்டி வருண யாகம் நேற்று நடந்தது. திருவக்கரையில் சந்திர மவுலீஸ்வரர் கோவிலில், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் சிறப்பு யாகம் நேற்று நடந்தது. அதனையொட்டி, காலை 9:15 மணிக்கு ருத்ர ஹோமம், ருத்ர ஜபம் நடந்தது. காலை 9:45 மணிக்கு மழை வேண்டி வருண சூக்த பாராயணம், வருண காயத்திரி ஹோமம், ஏகாதச ருத்ர ஜபம் நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு சிவபெருமானுக்கு ருத்ராபிஷேகம், பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. செயல் அலுவலர் மேனகா, பிரகாஷ், ஆய்வாளர் சுரேஷ், மேலாளர் ரவி, திருவக்கரை ஊராட்சி தலைவர் வேணு, பரமேஸ்வரன் குருக்கள், சேகர் குருக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !