உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

திரவுபதியம்மன் கோவில் தேர் திருவிழா கோலாகலம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் திரவுபதியம்மன் கோவில் திருத்தேர் விழா நடந்தது. கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள திரவுபதியம்மன் அக்கினி வசந்த உற்சவம் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு அர்ச்சுனன் தபசு மரம் ஏறும் மகாபாரத நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை திரவுபதியம்மன், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. காலை 8 மணியளவில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் முன்பு விராட பருவம், மாடு திருப்புதல் நடந்தது. காளி வேடமிட்ட பக்தர் ஒருவர் களிமண்ணால் செய்யப்பட்ட கோட்டியினை இடித்தார். திருத்தேருக்கு புன்னியாக வஜனம் செய்து வைக்கப்பட்டது. திரவுபதி அம்மனை தேரில் எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தினர். பகல் 1.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தனர். மாலை 5.30 மணிக்கு தீமதி விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !