சாம்பவர்வடகரையில் வளைகாப்பு விழா
ADDED :4521 days ago
கடையநல்லூர்: சாம்பவர்வடகரையில் கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழா நேற்று நடந்தது.தமிழக அரசின் உத்தரவின்படி கர்ப்பிணி பெண்களுக்கான வளைகாப்பு விழா சாம்பவர் வடகரை டவுன் பஞ்.,தலைவி செல்வி மூர்த்தி தலைமையில் நடந்தது.துணைதலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். டவுன் பஞ்., செயல் அலுவலர் ஜேம்ராஜ், சமூகநல அலுவலர் ஜெயசூர்யா, கவுன்சிலர்கள் செல்வி, திருமலைச்செல்வம் உட்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 30க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு விழா மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.