மழை வேண்டி நந்தி பகவானை சுற்றி நீர் நிரப்பி வழிபாடு
தூத்துக்குடி: மழை வேண்டி நேற்று தூத்துக்குடி சிவன் கோயிலில் வருண ஜெபம், நந்திபகவான் கழுத்துவரை நீர் நிரப்பி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். தமிழகத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பெய்ய வலியுறுத்தி தமிழகத்தில் உள்ள அற நிலையத்துறை முக்கிய கோயில்களில் யாகம், சிறப்பு பூஜைகள் நடத்த முதல்வர் ஜெ. உத்தரவிட்டார்.இதன்படி நேற்று தூத்துக்குடி சிவன் கோயிலில் மழை வேண்டி நடந்த சிறப்பு பூஜையில் மழை வேண்டி பர்ஜன்னிய சாந்தி, ஜெபபாராயணம், வருண காயத்திரிஹோமம், வருண பிரார்த்தனை போன்றவை நடந்தது.இதனை தொடர்ந்து சிவபெருமானுக்கு ருத்ரஜெப பாராயணம் செய்து தாராபிஷேகம் நடந்தது. நந்திக்கு நீர் நிரப்பி வழிபட்டால் மழை நிச்சயம் வரும் என்பது ஐதீகம் என்பதால் நந்தி பகவானை சுற்றி பிரத்யேகமாக தொட்டி கட்டி அதில் நீர் நிரப்பி வழிபாடு நடந்தது. பின்னர் மழைக்காக நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது.விழாவில் கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்தி ரன், தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், கோயில் கணக்கர் சண்முகசுந்தரம் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.