உத்தர்காண்ட் வெள்ளத்தில் பலிமோட்ச தீபம், ஆத்ம சாந்தி யாகம்
திருவண்ணாமலை: உத்தர்காண்ட் மாநிலத்தில் புனித யாத்திரை சென்று, பலியானவர்களுக்கு மோட்ச தீபம் மற்றும் ஆத்ம சாந்தி யாகம் நடந்தது.உத்தர்காண்ட் மாநிலத்தில் பெய்த பேய் மழை, நிலச்சரிவு காரணமாக ஹிந்துக்களின் புனித இடமான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனாநதி ஆகிய புனித ஸ்தலங்களுக்கு செல்லும் சாலைகளில் சிக்கி பல ஆயிரம் யாத்ரீகர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலியாகினர்.பலியானவர்களின் ஆன்மா சாந்தி அடைய, ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோவில் கமண்டல நாக நதி ஆற்றின் அருகே தென்னிந்திய புரோகிதர்கள் சங்கம், ஆரணி கிளை மற்றும் தமிழ்நாடு பிராமணர்கள் சங்கம் சார்பில் மோட்ச தீபம் மற்றும் ஆத்ம சாந்தி யாகம் நடந்தது. இயற்கை பேரழிவுகள் ஏற்படாமல் இருக்கவும், உலக நன்மைக்காகவும் யாகம் நடத்தப்பட்டது,தென்னிந்திய புரோகிதர்கள் சங்க தலைவர் ஆற்காடு நரசிம்ம ஐயர் தலைமையில் இந்த யாகம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் கலந்து கொண்டனர்.