உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீபாஞ்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தீபாஞ்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த, சோழியம்பாக்கம் கிராமத்தில் உள்ள தீபாஞ்சி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நடந்தது. கடந்த மாதம், 28ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு ஹோமம், அம்மன் அலங்காரம், திருவிளக்கு பூஜை, 108 பால்குட அபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம், அம்மனுக்கு மஹா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடத்தப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு நடந்த தீமிதி விழாவில், திரளான பக்தர்கள் விரதம் இருந்து, தீ மிதித்தனர். பின்னர் வாண வேடிக்கை, அம்மன் திருவீதியுலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !