மீசை கிருஷ்ணர்
ADDED :4508 days ago
திருவல்லிக்கேணியில் எழுந்தருளி இருக்கும் பார்த்தசாரதி பெருமாள் புகழ்பெற்றவர். குடும்பசகிதமாக எழுந்தருளியிருப்பது சிறப்பு. இவருக்கு வேங்கடகிருஷ்ணன் என்று பெயர். இவருடன் மனைவி ருக்மணி பிராட்டியும், தம்பி சாத்யகி, அண்ணன் பலராமர், மகன் பிரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகிய குடும்ப உறுப்பினர்களுடன் இவர் எழுந்தருளியிருக்கிறார். அர்ஜூனனுக்கு தேர் ஓட்டிய சாரதியாக இருக்கும் கிருஷ்ணர் 108 திவ்யதேசங்களில், இங்கு மட்டுமே வளர்ந்த ஆயர்குலத்தை நினைவூட்டும் விதத்தில் பெரிய மீசையுடன் காட்சி தருகிறார்.