உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாத் ரத யாத்திரை துவங்கியது!

உலகப் புகழ்பெற்ற ஜெகந்நாத் ரத யாத்திரை துவங்கியது!

ஆமதாபாத்: உலகப் புகழ்பெற்ற ஆமதாபாத் ஜெகந்நாதர் ஆலய ரத யாத்திரையில் லட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே ஜெகந்நாதரின் 136வது ரதயாத்திரை இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. பாரம்பரிய முறைப்படி யானைகள் முன் செல்ல 400 ஆண்டுகள் பழமையான ஜெகந்நாதர் ஆலய ரதம் வீதிகளில் வலம் வருகிறது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இவ்விழாவில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து யாத்திரையை துவக்கி வைத்தார். ஜெகந்நாதரின் ரதத்தை தொடர்ந்து பால்தேவின் ரதமும் வலம் வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !