உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னி: தாராள பணம்!

கன்னி: தாராள பணம்!

மென்மையான அணுகுமுறை கொண்ட கன்னி ராசி அன்பர்களே!

ராசிக்கு 11ல் உள்ள சூரியன் நன்மை தருவார். 10ம் இடத்தில் இருக்கும் புதனும் ஜூலை30ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார். சுக்கிரன் ஆகஸ்ட்12 க்கு பிறகு சிம்மத்திற்கு வந்து நன்மை தருவார். செவ்வாயால் பயன் இல்லை. அதே போல் 2ல் உள்ளசனி, ராகு, 8-ல் உள்ள கேதுவும் சாதகமாக இல்லை. மாதத் தொடக்கத்தில் பணவரவு இருக்கும். ஜூலை18 சுக்கிரன் இடமாறுவதால் பொருள் நஷ்டம் ஏற்படலாம். ஆகஸ்ட் 12க்கு பிறகு மதிப்பு, பெண்களால் பொருள் சேரும். பெண்களும் உதவிகரமாக இருப்பர். சிலரது வீட்டில் களவு போக வாய்ப்பு உண்டு. செவ்வாய் சாதகமற்ற இடத்தில் உள்ளதால் உஷ்ணம், தோல் தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. பணியாளர்கள் வேலையில் திருப்தி காண்பர். அதிகாரிகளின் ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கும். படித்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆகஸ்ட் 3,4,5 தேதிகளில் எதிர்பாராத நற்பலன் கிடைக்கும்.தொழிலதிபர், வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். அரசின் ஆதரவு கிட்டும். குறைந்த முதலீட்டில் புதியதொழில் தொடங்க வாய்ப்புண்டு. ஜூலை30 க்கு பிறகு பொருளாதாரம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆகஸ்ட் 3,9, 13,14 தேதிகளில் சந்திரனால் தடை வரலாம். கலைஞர்கள் முன்னேற்றமான பலன் காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சமூகநல சேவகர்கள், அரசியல்வாதிகள் வளர்ச்சி பெறுவர். மாணவர்கள் நன்கு படிப்பர். கல்வி வளர்ச்சியோடு விளையாட்டுத்துறையிலும் வெற்றி காண்பர். ஜூலை30 வரை புதன் சாதமான இடத்தில் இருப்பதால் நற்பலன் உண்டாகும். விவசாயிகளுக்கு செலவு குறைந்து வருமானம் அதிகரிக்கும். கால் நடைகள் வளம் அதிகரிக்கும். வழக்கு விவகாரத்தில் சாதக பலன் கிடைக்கும். பெண்கள் கணவனின் அன்பை பெறுவர். குடும்பம் சிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்க யோகமுண்டு.

நல்லநாட்கள்: ஜூலை18,19,20,25,26,27,28, ஆகஸ்ட் 3,4, 5,6,7,10,11,12,15,16
கவனநாட்கள்: ஜூலை 29,30,31 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 7,9    நிறம்: செந்தூரம், வெள்ளை
வழிபாடு: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு துணை நிற்கும். செவ்வாயன்று முருகன் கோயிலுக்கு செல்லுங்கள். ஏழைகளுக்கு துவரம்பருப்பு தானம் செய்வது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !