உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரதோஷ வேளையா! இதை தெரிஞ்சுக்கிடுங்க!

பிரதோஷ வேளையா! இதை தெரிஞ்சுக்கிடுங்க!

பிரதோஷத்தன்று சிவாலய தரிசனத்துக்கு செல்வோர் ஏராளம். நந்தி பகவானுக்கு பாசிப்பயிறு, தட்டைப்பயிறு படைப்பது, அபிஷேகம் செய்வது, வில்வம் அல்லது அருகம்புல் மாலை அணிவிப்பது, தேவாரம், திருவாசகம் பாடுவது என கோயிலே களை கட்டும். இந்தநாளில் நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க என்று சிவபுராணத்தை உச்சரிக் காத நாக்குகள் குறைவு. ஆனால், நமசிவாய என்பதன் பொருள் என்ன தெரியுமா? நம என்பது பெயர். சிவம் என்றால் மங்களம். மங்களமான பெயரைக் கொண்டவரே என்பது இதன் பொருள். நம் இல்லங்களில் நடக்கும் எல்லா நிகழ்வுகளும் மங்களகரமாய் நடந்து முடிய வேண்டும் என்பதற்காகவே, நமசிவாய வாழ்க பாட லைப் பாடிவிட்டு வருகிறோம். புரிகிறதா!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !