உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செக்கோடி மண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

செக்கோடி மண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி: பாலக்கோடு அடுத்த செக்கோடி ஸ்ரீ கோலவிழி மஹா மண்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வரும், 15ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று ஸ்வாமிக்கு அதிகாலை, 4.30 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும், கணபதி ஹோமும் நடந்தது. இன்று (ஜூலை 13) நவக்கிரக ஹோமம், நூதன பிம்பங்களுக்கு அஷ்ட தச க்ரியைகள், சயனாதி வாசம், மாலை 6 மணிக்கு சங்கிரஹணம், புற்றுமண் எடுத்தல், பிரவேசபலி, வாஸ்து சாந்தி, ரஷோக்ன ஹோமம் நடக்கிறது.நாளை காலை, 6 மணிக்கு லட்சுமி ஹோமம், சாந்தி ஹோமம், திசா ஹோமம், தீர்த்த சங்கிரஹணம், யாகசலை நிர்மாணம், 6 மணிக்கு அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், ஆச்சார்யவர்ணம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், யாத்ராதானம், யாகசாலை பிரவேசம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனையும், இரவு 7.30 மணிக்கு அஷ்ட பந்தன யந்திர நவரத்ன சமர்பணம் நடக்கிறது.வரும், 15ம் தேதி காலை 6.30 மணிக்கு அவப்ருதயாகம், ரக்ஷாபந்தனம், நாடி சந்தானமும், தத்வார்ச்சனை, ஸ்பர்சாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனையும் 9 மணிக்கு யாத்ரா தானம், 9.30 மணிக்கு விமான கலசத்திற்கு கும்பாபிஷேகமும், 9.45 மணியிலிருந்து 10 மணிக்குள் ஸ்ரீ கோலவிழி மஹா மண்டு மாரியம்மனுக்கு, சிவாச்சாரியார் செல்வமுத்து குமாரசாமி பூசாரி தணிகாசலம், ஈஸ்வரன் ஆகியோர் மஹா கும்பாபிஷேகத்தை நடத்தி வைக்கின்றனர்.தொடர்ந்து மஹா அபிஷேகமும் நடக்கிறது. காலை, 10.20 மணிக்கு மஹா தீபாராதனையும், எஜமான மரியாதை ஊர்வலமும், 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !