உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரத்தாழ்வார் கோவிலில் லட்சார்ச்சனை

சக்கரத்தாழ்வார் கோவிலில் லட்சார்ச்சனை

கரூர்: கரூர் சாத்தானி சந்து காமராஜ் மார்கெட் சக்கரத்தாழ்வார் கோவிலில் 7ம்ஆண்டு கும்பாபிஷேக விழா முன்னிட்டு, லட்சார்ச்சனை விழா நடந்தது. விழாவில், சுதர்ஸன ஹோமம், கலச ஸ்தாபனம், விஷேச திருமஞ்சனம் மற்றும் ஸ்வாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து, இரவு வாண வேடிக்கை களுடன் புஷ்ப பல்லக்கில் ஸ்வாமி திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !