மாணிக்கவாசகர் குருபூஜை விழா
ADDED :4516 days ago
மதுரை: மதுரையில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில், மாணிக்கவாசகர் குருபூஜை நடந்தது.ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கிளாசிக் கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளர் அஸ்வின் ஜெயகுமார் வரவேற்றார். தருமை ஆதீனப் புலவர் குருசாமி தேசிகர், மாணிக்கவாசகர் பூஜை நடத்தினார். சொற்பொழிவாளர் பழனிச்சாமி, மீனாட்சி கல்லூரி தமிழ்த்துறை இணை பேராசிரியர் காந்திமதி பேசினர். அமைப்பாளர் கண்ணன், பொருளாளர் பானுமதி, துணை அமைப்பாளர் விவே கானந்தன் பங்கேற்றனர்.