கார்மேல் மாதா ஆலயத்தில் இன்று கொடியேற்றம்
ADDED :4516 days ago
திருப்போரூர்: கோவளம் கார்மேல் மாதா ஆலயத்தில், 205வது ஆண்டு தேர் திருவிழா, இன்று, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கோவளத்தில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட, கார்மேல் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில், ஆண்டுதோறும் தேர் பவனி விழா வெகு விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டு, 205வது ஆண்டு தேர் திருவிழா, இன்று மாலை, 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதை தொடர்ந்து, நாளை, விசேஷ திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெறுகிறது. வரும், 16ம் தேதி மாலை 6:00 மணிக்கு, பிரதான விழாவான, மாதா ஆடம்பர தேர் பவனி நடைபெறும்.