உத்தரகோசமங்கை கோயிலில் ஆனி திருமஞ்சனம்!
ADDED :4574 days ago
ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் நேற்று அதிகாலையில் திறக்கப்பட்டது. மரகத நடராஜர் சன்னதியில் உற்சவ நடராஜருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகமும், இதை தொடர்ந்து தாழம்பூ சாத்தப்பட்டு, தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். உற்சவர் நடராஜர் கோயில் உள் வீதிகளில் வலம் வந்தார். ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் சாமிநாதன், கோயில் பேஷ்கார் ஸ்ரீதர் செய்தனர்.