சக்தி முனியப்ப சுவாமிக்கு கும்பாபிஷேக விழா
ADDED :4515 days ago
வெரைட்டி ஹால் ரோடு அய்யண்ண கவுடர் வீதியிலுள்ள சக்தி முனியப்பன், கருப்பராயர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 12ம் தேதி கும்பாபிஷேக விழா, சக்தி முனியப்பன், கருப்பராயன் கோவிலில் மங்களஇசை திருமுறை பாராயணத்தோடு துவங்கியது. கணபதிஹோமம், மகா தீபாராதனை நடந்தது. சித்தி விநாயகர் கோவிலிருந்து தீர்த்தக்குடம் எடுத்துவரப்பட்டது. மாலை திருவிளக்கு வழிபாடு, வாஸ்துசாந்தி, புற்றுமண்வழிபாடு நடந்தன. 13ம் தேதி மங்களஇசை, திருப்பள்ளி எழுச்சி நடந்தன. அதன் பின், கோபுரகலசம் நிறுவப்பட்டது. இரவு 10.00 மணிக்கு எண் வகை மருந்து சாத்தப்பட்டது. நேற்று காலை 5.00 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் துவங்கின. காலை 6.00 மணிக்கு சிவாச்சாரியார்கள் முன்னிலையில் கோபுரகலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.