கோதண்டராமர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4516 days ago
பாகூர்: பனையடிக்குப்பம் கோதண்டராமர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. கரையாம்புத்தூர் அடுத்த பனையடிக்குப்பம் கிராமத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சீதா லட்சுமண பரத சத்ருக்ன அனுமத் சமேத கோதண்டராமர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதையொட்டி, கடந்த 12ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்தது. நேற்று காலை 9:45 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.