குரு அக்காசுவாமிகள் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசனம்
ADDED :4516 days ago
புதுச்சேரி: வைத்திக்குப்பம் குரு அக்காசுவாமிகள் கோவிலில், நடராஜ பெருமானுக்கு ஆனித் திருமஞ்சன மகா அபிஷேகம் மற்றும் மகா குரு பூஜை விழா நடந்தது. கோவிலில் 143வது குரு பூஜை விழா, கடந்த 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. ஆனி திருமஞ்சனத்தையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு நடராஜ பெரு மான் மற்றும் சிவகாம சுந்தரி அம்பாளுக்கு மகா அபி ஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிவகாம சுந்தரி சமேத, நடராஜபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தரிசன நிகழ்ச்சியில் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., உள்பட திர ளான பொதுமக்கள் பங்கேற்றனர். மாலை 6:00 மணியள வில், நடராஜபெருமான், மாடவீதியுலா நடந்தது.