பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4516 days ago
மேட்டூர்: கொளத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பொன்விழா கும்பாபிஷேகம் நடந்தது. கொளத்தூர், சந்தைப்பேட்டையில், 50 ஆண்டு பழமையான பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கட்டி, 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று காலை, சந்தைப்பேட்டை பத்ரகாளியம்மன் கோவில் பொன்விழா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமம், கங்கணம் கட்டுதல், காவிரியில் இருந்து புனித நீர் கொண்டு வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை வினாயகர், பத்ரகாளியம்மன், நவக்கிரகங்கள், மூலவர், விமானம் மகாகும்பாபிஷேகம் நடந்தது. கொளத்தூர் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மஹா அபிஷேகம், தசதரிசனம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.