வாணிகணபதி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4516 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அய்யூர் அகரம் நாகர் பப்ளிக் பள்ளியில் புதியதாக கட்டியுள்ள வாணி கணபதி கோவில் கும்பாபிஷேகம் விழா நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 13ம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக யாகம், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்பணம், முதற்கால யாக பூஜையும் நடந்தது. பின், நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, தத்வார்ச்சனை, காலை 9 மணிக்கு பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, காலை 10.30 மணிக்கு விமான கோபுரம், வாணி கணபதி, பரிவாரங்கள் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. வடபழனி சிவஸ்ரீ சீனிவாச சிவாச்சாரியார், ஜெயபால், பத்மநாபன், பள்ளி சேர்மன் ராஜசேகர், தாளாளர் உமாமகேஸ்வரி, பள்ளி முதல்வர் சசிகலா விஜயகுமார், துணை முதல்வர் கலைச்செல்வன், ஊராட்சி தலைவர்கள் ரேணுகா ராஜேவேல், குமாரராஜா மற்றும் ரோட்டரி ரவி, லயன்ஸ் ராஜவேல் பங்கேற்றனர்.