கங்கையம்மன் கோவில் குளம் சீரமைக்கப்படுமா?
ADDED :4516 days ago
தண்டலம்: தண்டலத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த தண்டலத்தில், கங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள குளத்தில், சிலர், முறைகேடாக மண் எடுத்துள்ளதால், உருக்குலைந்து காணப்படுகிறது. குளத்தில், பக்க தடுப்பு கற்களோ, படித்துறைகளோ இல்லை. இதனால், மழை பெய்து நீர் வந்தாலும், குளத்தினை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, இதனை சீரமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.