உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகுளம் கோயிலில் ரூ.4 கோடியில் திருப்பணி

பெரியகுளம் கோயிலில் ரூ.4 கோடியில் திருப்பணி

பெரியகுளம்: பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜகோபுரம் மற்றும் கோயிலில் திருப்பணி வேலைகளுக்கு 4 கோடி ரூபாயில், பணிகள் துவங்கியது. பெரியகுளம் பாலசுப்பிரமணியசுவாமி கோயில் சைவம் வளர்த்த தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில். வராகநதியின் தென்கரையில் அமைந்துள்ளது. பாண்டிய நாடு சோழமன்னான ராஜேந்திரசோழானால் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோயிலில் கட்டட அமைப்பில் எந்த கோயிலிலும் இல்லாதபடி, சுப்பிரமணியர் (முருகன்), ராஜேந்திரசோழீஸ்வரர் (சிவன்), அறம்வளர்த்த நாயகி (அம்பாள்) ஆகிய மூன்று சந்நிதிகளும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன. ஒவ்வொரு சந்நிதிக்கும் ஒரு கொடிமரமாக மூன்று கொடி மரங்கள் உள்ளன. உ.பி., காசிக்கு அடுத்தாற் போல் பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் வராகநதி கரையோரங்களில் எதிர், எதிராக ஆண்மருதமரம், பெண்மருதமரம் அமைந்துள்ளது.

திருப்பணி துவக்கம்: வராலாற்று சிறப்புமிக்க கோயிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கும் இரண்டு கோடியும், கோயிலுக்குள் புதிதாக கணபதி சன்னதி, வெளிபிரகாரம், வாகனமண்டபம், சுற்றுச்சுவர், சன்னதிகளில் புதிய தளம், தூண்களை புதுப்பித்தல், தரைத்தளம் புதுப்பித்தல் பணிகளுக்கு இரண்டு கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்து அறநிலையத்துறை நிர்வாகம் மற்றும் உபய திருப்பணி நன்கொடையாளர்கள் திருப்பணிக்கு நிதி ஏற்பாடு செய்துள்ளனர். கணபதி ஹோமம் பூஜை செய்து திருப்பணி துவங்கியது. திருப்பணிக்குழு தலைவர் சசிதரதன், தமிழக தலைமை ஸ்தபதி முத்தையா, திருப்பணிக்குழு உறுப்பினர்கள், ஆன்மிக பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !