சிவகிரி கோயிலில் ஆடி பூக்குழி திருவிழா கொடியேற்றம்
சிவகிரி: சிவகிரி அருள்மிகு இலக்கனேஷ்வரர் காந்தேஸ்வரி சமேதரர் கோவிலில் ஆடிமாதபூக்குழித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நேற்று காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் மூலவர் இலக்கனேஷ்வரர், காந்தேஸ்வரி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், நெய், பன்னீர் கரும்பு சாறு உட்பட 18வகையான நறுமணப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அலங்காரம் செய்விக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. கோயிலில் உள்ள கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் நடந்தது. கொடிபட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றி வைக்கப்பட்டது. கோயில் பணியாளர்களுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. பின்பு சப்பரத்தில் உற்சவர் வீதிஉலா நடந்தது. தர்மகர்த்தா நட்காடலிங்கத்தேவர், நடராஜன், பூசாரி அய்யாத்துரை உட்பட விழாக்குழுவினர் கலந்து கொண்டனர். தொடர்ந்து வரும் 18ம் தேதி அன்று காலை திருக்கல்யாணம், 10 மணிக்கு அன்னதானம், 6 மணிக்கு தீபாராதனை, சப்பரம் வீதிஉலா, வில்லிசை நடைபெறுகிறது. வரும் 22ம் தேதி அன்று மாலை 6 மணிக்கு பூக்குழி நடைபெறுகிறது. கோமாதா பூ இறங்குவது சிறப்பு ஆகும். யானை அம்பாரி, முளைப்பாரி, அக்னிசட்டி, அழகுரதம், கருவுகுத்து, அக்னிகாவடி ஆகியவையுடன் சப்பரத்தில் அம்மன் வீதிஉலாவுடன் பூ இறங்கப்படுகிறது. இரவு 8 மணிக்கு ஆயிரம் கண்பானை, புஷ்பாஞ்சலி, வரும் 23ம் தேதி அன்னதானம் நடைபெறுகிறது.