உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை கந்த கோட்டத்தில் மகா கும்­பா­பி­ஷேகம்!

சென்னை கந்த கோட்டத்தில் மகா கும்­பா­பி­ஷேகம்!

சென்னை: பாரி­முனையில் உள்ள முத்துக்குமார சாமி கோவிலில், மகா­கும்­பா­பி­ஷேகம் கோலா­க­ல­மாக நடை­பெற்­றது. சென்னை பாரி­முனை ராசப்ப செட்டி தெருவில் உள்ள, கந்­த­கோட்டம் என, அழைக்­கப்­படும் முத்­துக்­கு­மா­ர­சாமி கோவில் உள்­ளது. இக்­கோவில் கும்­பா­பி­ஷே­கத்தை ஒட்டி, கடந்த மார்ச் 29ம் தேதி திருப்­பணி துவங்­கி­யது. கோவிலின் ராஜ­கோ­புரம் மற்றும் அனைத்து விமா­னங்­களும் செப்­ப­னி­டப்­பட்டு, பஞ்­ச­வர்ணம் தீட்­டப்­பட்டு, கடந்த வாரம் திருப்­பணி நிறை­வ­டைந்­தது. இதை அடுத்து, கந்­த­சாமி கோவில் மகா­கும்­பா­பி­ஷேகம், நேற்று காலை நடை­பெற்­றது. ­பகல், 12:௦௦ மணிக்கு உற்சவர் மற்றும் மூல­வ­ருக்கு மகா­கும்­பா­பி­ஷே­கமும், ஆரா­த­னையும் நடை­பெற்­றது. மாலை, 5:௦௦ மணிக்கு, திருக்­கல்­யாணம் நடந்­தது. இரவு, 8:௦௦ மணிக்கு முத்­துக்­குமார­சாமி, தங்­க­மயில் வாக­னத்­திலும், விநா­யகர், சிம்ம வாக­னத்­திலும், வள்ளி, தெய்­வானை நாக வாக­னத்­திலும், சொக்­க­ நாதர், யானை வாக­னத்­திலும், ஆறு­மு­க­சாமி, வெள்ளி ரதத்­திலும், பால­சுப்­பி­ர­ம­ணியர் தங்கத் தேரிலும் பவனி வந்­தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !