உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமலான் சிந்தனைகள்: நிறத்திற்காக வெறுக்காதீர்!

ரமலான் சிந்தனைகள்: நிறத்திற்காக வெறுக்காதீர்!

கருப்பு என்ற ஒரே காரணத்துக்காக சிலர் தங்களுக்கு வரும் நல்ல பெண், மாப்பிள்ளையை ஒதுக்கி விடுகிறார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், வெள்ளை நிறத்தவர்கள் கருப்பு நிறத்தவர்களையும், உயரமானவர்கள்குள்ளமானவர்களையும், முதலாளிகள் பணியாட்களையும் இழிவாக பேசக்கூடாது, என்கிறார்கள்.

அபிசீனிய நாட்டைச் சேர்ந்த பிலால் (ரலி) அவர்கள், அண்ணலாரின் நெருங்கிய தோழர். கருப்பான இவர் அடிமையாக இருந்து. கடும் துன்பங்களுக்கு ஆளானார். இதை அறிந்த நாயகம்(ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களை மீட்டு வரச் செய்தார்கள். அவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்த அண்ணலார், அவருக்கு தொழுகைக்கு மக்களை அழைக்கும் உயரிய பணியைக் கொடுத்தார்கள். ஒருசமயம் பிலால் (ரலி) அவர்கள் தோழர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, மற்றொரு நபித்தோழர், ஏதோ காரணத்தினால் அவரை, ""கருப்பு நிற பெண்ணின் மகனே என்று சொல்லிவிட்டார். இச்செய்தியை அவர் அண்ணலாரிடம் கூறியபோது, அத்தோழரிடம் ""அறியாமை காலத்தில் இருந்து வந்த பண்பு உங்களிடமிருந்து இன்னும் அகலவில்லை எனச்சொல்லி கடிந்து கொண்டார்கள். பின்னர், அந்தத் தோழர் பிலால் (ரலி) அவர்களிடம் மன்னிப்பு கேட்டார். நிறத்திற்காக ஒருவரை வெறுக்கக்கூடாது என்பது இன்றைய சிந்தனையாகட்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.23


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !