உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதி­பு­ரீ­சு­வரர் கோவிலில் மகா கும்­பா­பி­ஷேகம்!

ஆதி­பு­ரீ­சு­வரர் கோவிலில் மகா கும்­பா­பி­ஷேகம்!

பள்­ளிக்­க­ரணை: பள்­ளிக்­க­ர­ணையில் அமைந்­துள்ள சாந்­த­நாயகி அம்பாள் சமேத ஆதிபுரீ­சு­வரர் கோவில் மகா கும்பா­பி­ஷேகம், நேற்று, விம­ரிசை­யாக நடந்தது. இதில், ஏரா­ள­மான பக்தர்கள் கலந்து கொண்டனர். வேளச்­சே­ரி ­– தாம்­பரம் சாலை, பள்ளிக்­கரணையில் அமைந்­து உள்ளது, சாந்­த­நா­யகி அம்பாள் சமேத ஆதி­பு­ரீ­சு­வரர் கோவில். ஆயிரம் ஆண்­டுகள் பழமை வாய்ந்த இக்­கோவில் ராகு, கேது பரி­கார ஸ்தலமாக விளங்­கு­கி­றது. கடந்த, 1999ல், இந்த கோவி­லுக்கு கும்­பா­பி­ஷேகம் நடந்­தது. இதை அடுத்து, பிர­கார மண்டபம், ஆஞ்ச­நேயர், நாயன்­மார்கள், நடராஜர் சன்னிதிகள், மூன்று நிலை கொண்ட 39 அடி உயரம் கொண்ட முகப்பு கோபுரம், 27 அடிகள் கொண்ட கொடி மரம் அமைக்­கப்­பட்­டன. இந்த நிலையில் இக்கோவிலின் அஷ்ட பந்­தன மகா கும்பா­பி­ஷேகம் நேற்று விம­ரி­சை­யாக நடந்­தது. இவ்­வி­ழாவில் ஏரா­ள­மான பக்­தர்கள் பங்­கேற்­றனர். அவர்­க­ளுக்கு கும்ப நீர் தெளிக்­கப்­பட்­டது. நேற்று மாலை, திருக்­கல்­­யாண உற்­சவம், சுவா­மியின் வீதி உலா புறப்­பாடு ஆகியவை நடந்­தன. விழா­விற்­கான ஏற்­பா­டு­களை சாந்­த­நா­யகி அறக்கட்ட­ளை­யினர் செய்திருந்­தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !