திந்திரிணீஸ்வரர் கோவில் ஆனி திருமஞ்சன விழா
ADDED :4832 days ago
திண்டிவனம்: திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு ஆனி திருமஞ்சன விழா நடந்தது. மைய மண்டபத்தில் நடராஜ பெருமான், அம்பாள் சிவகாம சுந்தரி மற்றும் மாணிக்கவாசருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை, தரிசனம் நடந்தது. இதையடுத்து சபையில் எழுந்தருளி அருள்பாலித்தனர். பூஜைகளை ராதாகுருக்கள், பாலாஜிகுருக்கள் செய்தனர்.