ஆனி திருமஞ்சன உற்சவம்
ADDED :4516 days ago
மேலையூர்: மேலையூர் நாகபரணீஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சனம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. திருப்போரூர் அடுத்த மேலையூரில் சோழர் கால சிறப்புமிக்க நாகபரணீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள, அசுரனை வதம் செய்யும் நடராஜருக்கு, நேற்று முன்தினம் ஆனி திருமஞ்சனம் நடந்தது. சிவ பக்தர்கள் சிவ நாமங்களை உச்சரித்து, திருவாசகம் பாடினர். இதே போன்று, கொண்டங்கி கிராமத்திலும், நடராஜருக்கு விசேஷ அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.