உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொண்டமாநத்தம் கோவில் திருப்பணிக்கு ரூ. 2 லட்சம் நிதி

தொண்டமாநத்தம் கோவில் திருப்பணிக்கு ரூ. 2 லட்சம் நிதி

வில்லியனூர்: தொண்டமாநத்தம் செங்கழுநீர் மாரியம்மன் கோவில் திருப்பணிக்கு, கார்த்திகேயன் எம்.எல்.ஏ., நிதி வழங்கினார். தொண்டமாநத்தம் செங்கழுநீர் மாரியம்மன் கோவில், புதிதாக அமைக்கப்படுகிறது. அதற்காக, இந்து அறநிலையத்துறை சார்பில் கோவில் திருப்பணிக்கு, முதற்கட்ட தவணையாக 2லட்சம் ரூபாய்க்கான காசோலையை, நேற்று கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கோவில் திருப்பணி குழு தலைவர் நாராயணசாமியிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், அறங்காவலர் குழு தலைவர் மோகன், செயலாளர் ஜெயராமன், துணைத் தலைவர் சிவராஜ், அமிமுர்தலிங்கம், புஷ்பராஜ் மற்றும் நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !