பிரதோஷத்துக்கு போறீங்களா! இதை தெரிஞ்சுக்கிடுங்க!
ADDED :4463 days ago
பிரதோஷத்தன்று சிவாலய தரிசனத்துக்கு செல்வோர் ஏராளம். நந்தி பகவானுக்கு பாசிப்பயிறு, தட்டைப்பயிறு படைப்பது, அபிஷேகம் செய்வது, வில்வம் அல்லது அருகம்புல் மாலை அணிவிப்பது, தேவாரம், திருவாசகம் பாடுவது என கோயிலே களை கட்டும். இந்தநாளில் நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க என்று சிவபுராணத்தை உச்சரிக்காத நாக்குகள் குறைவு. ஆனால், நமசிவாய என்பதன் பொருள் என்ன தெரியுமா? நம என்பது பெயர். சிவம் என்றால் மங்களம். மங்களமான பெயரைக் கொண்டவரே என்பது இதன் பொருள். நம் இல்லங்களில் மங்கள கரமாய் எல்லாம் நடந்து முடிய வேண்டும் என்பதற்காகவே, நமசிவாய வாழ்க பாடலைப் பாடிவிட்டு வருகிறோம். புரிகிறதா!