சாப்பிட்டா வடை! கேட்டா பாரதம்!
ADDED :4576 days ago
ரஸாலு என்ற மாம்பழ வகை ஆந்திராவில் பிரசித்தம். அதைப் பிழிந்தால் சாறு கொட்டும். அது போல மகாபாரதம் என்னும் மாம்பழத்தின் சாறு தான் விஷ்ணு சகஸ்ரநாமம். பாரதக்கதை முழுவதும் அதில் அடங்கியிருக்கிறது. சாப்பிட்டால் வடை மட்டுமே சாப்பிடணும்! கேட்டால் மகாபாரதத்தை மட்டுமே கேட்கணும் என்ற அர்த்தம் தரும் பழமொழி தெலுங்கில் உண்டு. வேதம் என்னும் கடலில், வியாசர் என்னும் மத்தால் கடைந்து கிடைத்த வெண்ணெயே மகாபாரதம். அதன் சாரமாக இருப்பது சகஸ்ரநாமம். அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள்களை எடுத்துச் சொல்லி
வீடுபேறுக்கு (மோட்சத்துக்கு) நம்மை தகுதிப்படுத்துகிறது.