உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாணியமேடு கிராமத்தில் சாகை வார்த்தல் திருவிழா

வாணியமேடு கிராமத்தில் சாகை வார்த்தல் திருவிழா

உளுந்தூர்பேட்டை: வாணியமேடு கிராமத்தில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த எல்லைகிராமம் ஊராட்சி வாணியமேடு கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா நடந்தது. விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. நேற்று மதியம் 3:00 மணிக்கு சக்தி அழைப்பும், கரக வீதியுலாவும் நடந்தது. பக்தர்கள் கூழ் குடங்களை ஏந்தி வந்து, கோவிலில் மாவிளக்கு வைத்து வழிபட்டனர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !