விருத்தகிரீஸ்வரர் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அழிப்பு!
ADDED :4465 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை ஈரோடு உழவார திருப்பணிக் குழுவினர் அழித்தனர். விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் கோபுரங்களில் ஆலம், அரசங் கன்றுகள், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், கோபுர சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, அதிலுள்ள அழகிய சிலைகளில் பல சேதமடைந்து கீழே விழுந்தன. அதைத்தொடர்ந்து, ஈரோட்டைச் சேர்ந்த சிறுதொண்டீஸ்வரர் உழவார திருப்பணிக்குழுவினர், விருத்தகிரீஸ்வரர் கோபுரங்களில் வளர்ந்துள்ள ஆலம், அரசங்கன்றுகள், செடி, கொடிகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.