உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. விழாவையொட்டி மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி, துர்க்கை அம்மன், விநாயகர், சுப்ரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. துர்க்கை அம்மன் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6:30 மணிக்கு 1008 விளக்கு பூஜை துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !