ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்
ADDED :4467 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி உற்சவம் நடந்தது. கடந்த மாதம் 14ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி தினம் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று தீமிதி உற்சவத்தையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். வரும் 21ம் தேதி தர்மர் பட்டாபிஷேகம், 26ம் தேதி காலை மணிமுக்தாற்றிலிருந்து பால்குட ஊர்வலம் நிகழ்ச்சியும், மாலை சந்தனக்காப்பு, திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.