ஆடி முதல் வெள்ளி குத்துவிளக்கு பூஜை
ADDED :4517 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆடி முதல் வெள்ளியையொட்டி களரி முனியப்பன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. களரி முனியப்பன், விநாயகர் சாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து மகாதீபாராதனை நடந்தது. பெண்கள் குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.