உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இஸ்லாமிய சிந்தனைகள்: பெண்களை மதிப்போம்!

இஸ்லாமிய சிந்தனைகள்: பெண்களை மதிப்போம்!

பெண்ணை நன்றாக நடத்துமாறு ஆண்டவன் ஆணையிடுகின்றான். ஏனெனில், அவர்களே உங்கள் அன்னையராகவும், அருமைப் புதல்விகளாகவும், மாமியாராகவும் இருக்கின்றார்கள், என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள். பெண்களைக் குறித்த அவர்களது பொன் மொழிகளைக் கேளுங்கள். திருமணம் செய்யும் முன்பு முதலில் பெண்ணைப் பாருங்கள். இதுதான் உங்களிடையே அன்பை ஏற்படுத்தும். ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யக்கூடாது. அதுபோல், பெண்கள் தங்களுக்கு பிரியமில்லாதவரையும் திருமணம் செய்யக்கூடாது. விதவைப் பெண்ணிடம் ஒப்புதல் பெறும் வரையிலும், கன்னிப் பெண்ணிடம் அனுமதி பெறும் வரையிலும் திருமணம் செய்து வைக்கக்கூடாது. கன்னிப்பெண்ணின் அனுமதி என்பது அவளது மவுனமாகும். பெண்கள் குறித்த இந்த நல்லுரைகளை இன்றைய சிந்தனையாகக் கொள்வோம். இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.50நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.26


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !