உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விளக்கொளி பெருமாள் கோவிலில் வேதாந்த தேசிகர் வீதியுலா

விளக்கொளி பெருமாள் கோவிலில் வேதாந்த தேசிகர் வீதியுலா

காஞ்சிபுரம்: விளக்கொளி பெருமாள் கோவிலில், வேதாந்த தேசிகர் திருவோணத்தையொட்டி, வீதியுலா சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம், கீரை மண்டபம் அருகே, விளக்கொளி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வேதாந்த தேசிகர் சுவாமி உள்ளனர். ஒவ்வொரு மாதமும், திருவோணம் நாளையொட்டி, தேசிகர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதன்படி, நேற்று காலை 9:00 மணிக்கு துவங்கிய சுவாமி வீதி உலா, விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, செங்கல்பட்டு சாலை, வரதராஜ பெருமாள் கோவிலின் நான்கு ராஜவீதிகள் வழியாக சென்று, மீண்டும் தேசிகர் கோவிலை அடைந்தார். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !