செப்.,1ல் திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் கும்பாபிஷேகம்
ADDED :4464 days ago
திருச்சுழி: திருச்சுழி திருமேனிநாதர் துணை மாலையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம், செப்., 1 ல் நடக்கிறது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காலவலர் சேதுபதி ராணி, பிரம்கிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்ட துணை மாலையம்மன் சமேத திருமேனி நாதர் கோயில், திருச்சுழியில்உள்ளது.இது, பாண்டி 14 ஸ்தலங்களில் 10 வது ஸ்தலமாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள், மாணிக்கவாசகர், ரமணமகரிஷி போன்றவர்களால் பாடல்கள் பாடப்பட்ட ஸ்தலமாகும். கவுதமர் அகலிகைக்கு திருமண கோலத்தில் காட்சியளித்த ஸ்தலம், ரமண மகரிஷி பிறந்த ஸ்தலம் என, சிறப்பு பெற்றது. இக்கோயில் மகா கும்பாபிஷேகம், ஆக., 26 காலை 6.15 மணிக்கு, யாக சாலை பூஜையுடன் துவங்குகிறது. செப்., 1 காலை 11.10 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.