முத்துப்பல்லக்கில் சவுந்தரராஜப் பெருமாள் வீதியுலா!
ADDED :4465 days ago
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில், முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்தார். கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, இன்றிரவுடன் 13 நாள் திருவிழா நிறைவடைகிறது. தினமும் இரவு மண்டகபடிதாரர் சிறப்பு வழிபாடு, பலவித வாகனங்களில் சுவாமி புறப்பாடு, கலை நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. திருக்கல்யாணம், தேரோட்டத்தை தொடர் ந்து முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. சன்னதியில் இருந்து முத்துப்பல்லக்கில் புறப்பட்ட சுவாமி, இரவு முழுவதும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாட்டினை செயல் அலுவலர் வேலுச்சாமி, தக்கார் அறிவழகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.